தமிழக அரசு டாக்டர்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமை இல்லை…!

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டன.

 

இதை எதிர்த்து மருத்துவர் பாலசுப்பிரமணியம் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என தெரிவித்தார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியும் பணியிடை மாற்றம் செய்தும் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.


Leave a Reply