--- --:--:-- --

நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

13

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி விநாயகர் கோவிலுக்கு நள்ளிரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் 3 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

 

அவர்களில் ஒருவன் கோவிலின் முன்பக்க கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சிசிடிவி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு உண்டியல் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

திருடி செல்லப்பட்ட உண்டியலில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை பக்தர்களின் காணிக்கை பணம் இருக்கும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon