--- --:--:-- --

3 பேர் கொலை வழக்கு- கொலையாளிக்கு தூக்கு

15

ஆலங்குளத்தை அடுத்த நெட்டுரை சேர்ந்தவர் பேச்சித்தாய். இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளை அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற ஆண்டவர் என்கிற நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுதாயின் புகாரின்பேரில் முத்துராஜ் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

 

இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்துராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேச்சுத்தாயின் அவரது மற்றொரு மகனான மாரியையும் தெருவில் வழிமறித்து வெட்டிக் கொன்றான். அத்துடன் மட்டுமின்றி பேச்சு தாயின் வீட்டிற்கு சென்ற முத்துராஜ் அங்கிருந்த பேச்சு தாயின் தந்தை கோவிந்தசாமி யையும் வெட்டிக் கொன்றான்.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் முத்துராஜ்க்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon