கோயிலின் அன்னதான கூட்டத்திற்கு பின்புறம் கிடைத்த தங்க புதையல்
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மண்ணுக்கடியில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. அன்னதான கூட்டத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அப்போது மண்ணுக்கு அடியில் கிடைத்த கலயத்தில் 505 தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் ஒரு நாணயத்தில் அரபு எழுத்து குறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மொத்தம் ஆயிரத்து 716 கிராம் எடை கொண்ட தங்க நாணயங்கள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவை எக்காலத்து நாணயங்கள் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




