--- --:--:-- --

பாடகர் சந்திரபாபுவின் பாடலை பாடி அசத்தும் சிறுவன்!

9

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும், பாடகருமான சந்திரபாபுவின் பாடலொன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தனது அற்புதமான குரல் வளத்தால் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடலை பள்ளி சிறுவன் ஒருவன் வகுப்பறையில் பாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சிறுவன் பாடுவதை விட பாடலுக்கு ஏற்ப சிறுவன் அசைந்து ஆடிக் கொண்டே பாடுவது தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகும் இச்சிறுவனின் பாட்டுக்கும் அவரது ஸ்டைலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon