காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களுடன் போட்டோ எடுத்த சச்சின்…!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். வல்லம் ஊராட்சிக்குட்பட்ட செயற்பட்டுவரும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் சார்பில் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட வந்த சச்சின் டெண்டுல்கர் அங்கிருந்த மாணவ-மாணவிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவரை வரவேற்கும் விதமாக வெல்கம் சச்சின் என்ற பதாகைகளை ஏந்தி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Leave a Reply