--- --:--:-- --

பாம்பு போன்று ஊர்ந்து செல்லும் “ரோபோ”

10

பாம்புகள் குறித்த ஆராய்ச்சிக்காக ரோபோ பாம்பு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு உதவி பேராசிரியர் சென்லி தலைமையில் இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த பாம்பு வடிவ ரோபோ உருவாக்கப்பட்டு வருகிறது.

 

பாம்புகள் இயங்குவதன் உயிரியல் பொறிமுறையை தெளிவுபட ஆராய்வதற்கு தங்களது ரோபோ பாம்பு உதவும் என அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த ரோபோ பாம்பே மாதிரி வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon