ஜெ. மரணம் தொடர்பான விசாரணை காலம் இன்றுடன் நிறைவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.

 

அவரது மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை அமைக்க தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆணையத்தின் விசாரணை காலம் இதுவரை 6 முறை நீக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா தரப்பு உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 

இதனிடைய மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 10 மாதங்களாக தடை நீடிக்கும் நிலையில் ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply