தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..! தூத்துக்குடியில் 4 செ.மீ மழைப்பதிவு!!
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் ஓய்ந்த நிலையில், கடந்த இரு தினங்களாக அபூர்வமாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. கிழக்கு மற்றும் வட, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசுவதால் நேற்று காலை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 4 செ.மீ, பாம்பனில் 3 செ.மீ., திருச்செந்தூரில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஈரக்காற்று வீசுவது தொடர்வதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்ய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




