--- --:--:-- --

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டால் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு

2

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஜேசு அலங்காரம் என்பவருக்கு வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.

 

அதை தொடர்ந்து அவர் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் அச்சம் காரணமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். இது தொடர்பாக ராமேஸ்வரம் கடலோர காவல் படை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த சூழலில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் 9 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon