தான்சானியாவில் சேர்ந்தவருக்கு தாடையில் வளர்ந்த சுமார் ஒரு கிலோ எடை கொண்ட கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தான்சானியா நாட்டை சேர்ந்த 38 வயது நோயாளி ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக முக தசைகளில் வலி, தாடையில் வீக்கம் ஆகிய பிரச்சினைகளால் உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். நோயின் தாக்கம் தீவிரமடைய அந்நாட்டு அரசு இந்த நோய் குறித்து ஆய்வு செய்து சிகிச்சைக்கு சிம்ஸ் மருத்துவமனையை பரிந்துரை செய்துள்ளது.
நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அமைலோ பிளாஸ்ட்ரோமா எனும் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதை எடுத்து கணினி தொழில்நுட்ப மாதிரிகளை கொண்டு அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் கீழ் தாடையில் இருந்த கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.