--- --:--:-- --

சிஏஏவு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக..! – 8வது நாளாக போராட்டம்

4

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் தொடங்கிய போராட்டம் எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன், பிரசன்னா உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை சோழிங்கநல்லூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் இஸ்லாமிய அமைப்பினர் மூன்றாவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ராமநாதபுரத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon