ஐஐடி பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த பேராசிரியர்!
சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல் போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விண்வெளி பொறியியல் துறை ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்ற போது அதை துறையை சேர்ந்த உதவி பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று பார்த்த போது தண்ணீர் குழாய் களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆண்கள் கழிவறையில் மறைந்திருந்த சுபம் பானர்ஜியிடம் விசாரித்தபோது அந்த செல்போன் அவருடையது என்பது தெரியவந்தது.

பெண்கள் கழிவறையில் செல் போனை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




