அவிநாசி அருகே விபத்தில் 20பேர் பலியான சோகம்..! பிரதமர் மோடி அனுதாபம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இன்று அதிகாலை கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

பலியான அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.சொகுசு பேருந்தில் பயணித்த 20 பேர் விபத்தில் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கோர விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், உரிய மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இதைத் தொடர்ந்து கேரள மாநில அமைச்சர் இருவர், உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் திருப்பூர் விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் திருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.

 

அவர்களுடைய குடும்பத்தினர் இந்த சோகத்திலிருந்து மீள கடவுளை பிரார்த்திக்கிறேன். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருப்போர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Leave a Reply