வளர்ப்பு நாயின் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு

நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் உயிரிழந்த தனது வளர்ப்பு நாயின் அஸ்தியை இந்தியா எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமோத்குமார் என்ற அவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழும் அவர் 10 ஆண்டுகளாக லைக்கா என்ற நாயை வளர்த்து வந்தார்.

 

அந்த நாய் அண்மையில் உயிரிழந்ததையடுத்து இந்து மத சம்பிரதாயப்படி இறுதி சடங்கு செய்தார். பின்னர் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து பீகார் எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தார். இதேபோல் கயாவிலும் பிண்ட தானம் அவர் செய்தார்.


Leave a Reply