--- --:--:-- --

பிப்., 24ஐ பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது கேவலமானது

9

பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது குறித்த கேள்விக்கு அது கேவலமான விஷயம் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

 

சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற மகளிருக்கான சுய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிராமகிருஷ்ணன் பாதிக்கப்படும் பெண்கள் மீது பழி போடும் நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதியை மாநில பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து இருப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon