--- --:--:-- --

திட்டமிட்டபடி இன்று நடைபெற உள்ள இஸ்லாமியர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்டம்

2

தடையை மீறி இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமைச்செயலகம் உள்ள பகுதியில் மார்ச் 11-ஆம் தேதி வரை எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

 

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த காஜா மொய்தீன், ஹஜரத், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னையில் கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின் தலைவர் காஜா மொய்தீன் திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் பகுதியில் இருந்து புறப்பட்டு தலைமை செயலகம் நோக்கி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon