பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்
சென்னை அருகே பெண் காவல் ஆய்வாளரை அவரது வீட்டிலேயே உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவரின் மகனான வெங்கடேசன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவ்விரு குடும்பத்தினருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என சொல்லப்படுகிறது. திங்களன்று குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வெங்கடேசனின் மனைவியை காவல் ஆய்வாளர் ஜெயந்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையறிந்து ஆத்திரமுற்ற வெங்கடேசன் காவல் ஆய்வாளரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது காவல் ஆய்வாளர் ஜெயந்தியை வெங்கடேசன் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜெயந்தி. தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




