கொரானா வதந்தியால் கறிக்கோழி விற்பனை சரிவு
கறிக்கோழி வழியாக கொரானா பரவும் என்று சமூக வலைதளங்களில் வந்த வதந்தியால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணை தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி பண்ணை விலை கொரானாவை தொடர்ந்து கிலோவுக்கு 35 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு தினமும் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மகாராஷ்டிர கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் கணக்கிடும் போது இந்த இழப்பு பல மடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோழி விற்பனை இதே நிலை தொடர்ந்தால் பண்ணையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், வரும் ஏப்ரல் மாதம் முதல் கறிக்கோழி விலை எகிறும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




