--- --:--:-- --

ஓடும் ரயிலில் இளைஞர் தொங்கியபடி தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ

23

ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர் பிழைத்த பதைபதைக்க வைக்கும் டிக் டாக் வீடியோவை பகிர்ந்துள்ள ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அனைவரும் விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

 

சகபயணியால் டிக்டாக்கில் பதிவு செய்யப்பட்ட 7 வினாடி நீளம் கொண்ட அந்த வீடியோவில் ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்த இளைஞர் பக்கவாட்டில் தவறி விழூகிறார். ரயிலின் அடியில் சிக்கி விழுவதுபோல் விழுந்ததால் சக பயணிகள் கூச்சல் எழுப்ப அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் நூலிழையில் உயிர் பிழைக்கிறார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஓடும் ரயிலில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வீரமல்ல முட்டாள்தனம் என்று பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon