ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் எச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் எச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில் ஜப்பான் அந்த முயற்சியில் ஈடுபட உள்ளது.
மேலும் செய்திகள் :
ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
குற்றம் குற்றமே வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச பொது, கண், எலும்பு, மகளிர் மரு...
அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்..!