தகாத உறவை கண்டித்த கணவனை கொல்ல முயன்ற ஆசிரியை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தகாத உறவை கண்டித்த கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மொட்டலூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுரங்கம் என்பவரது மனைவி பிரியா. காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு சில ஆண்களுடன் தகாத உறவு இருப்பதாகவும், கணவர் அதனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியா விபத்து ஏற்படுத்தியும், மயக்க மருந்து கொடுத்தும் கணவனை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொன்னுரங்கம் அளித்த புகாரின்பேரில் பிரியா அவருக்கு உதவிய சக்திவேல், அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




