பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் மரணம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ராஜ் கபூரின் மகன் ஷாருக் கபூர் எதிர்பாராதவிதமாக தனது 23 ஆவது வயதில் மெக்காவில் மரணமடைந்தார். ஷாருக் கபூர் தனது தாய் ஷஜிலா கபூருடன் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் கடும் குளிர் மற்றும் உடல் பலவீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் இறக்கும் முன் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் நடுக்கம் இருந்ததாகவும் அது வானிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும் என அவரது தாய் கருதியதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பின் தீவிரத்தை அருகிலிருந்தவர்கள் அறியும் முன் அவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக் படிப்பை முடித்த பின் அவரை நடிப்புத்துறையில் ஈடுபடுத்த ராஜ்கபூர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




