கோவை ஒண்டிபுதூர் முதல் காந்திபுரம் வரையிலான வழித்தடத்தில் 86 என்ற எண் கொண்ட யு.இ.இ, யு.இ.இ என்ற தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இப்பேருந்து இன்று ரயில் நிலையம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
அப்போது,பேருந்தை அசுர வேகத்துடன் இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மெதுவாகச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் அப்பயணிக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அந்த பயணியை பேருந்துகுள்ளேயே அவரை அடித்து உதைத்தனர்.இதனை சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணியை அடித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்று கோவையில் அசுர வேகத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளினால் விபத்துக்கள் ஏற்படுவதும் அன்றாட வாடிக்கையாக உள்ளது.தனியார் பேருந்தில் பயணியை ஒட்டுநர் மற்றும் நடத்துநர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.