கள்ளக்காதலனுடன் மனைவி உச்சக்கட்ட உல்லாசம்..! இருவரையும் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற கணவர்!!

தூத்துக்குடி அருகே மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் கண்டம் துண்டமாக சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை புங்கவர்நத்தம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சண்முகம் (வயது58). இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்துவிட்டார்.

 

இதன் பின்னர் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பவரை திருமணம் செய்தார். இதன் மூலம் மாரியம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் ஒரு மகன் தவிர்த்து அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மகன் ராமமூர்த்தி (30), சண்முகத்தின் வீட்டின் எதிரே புதிதாக வீடுகட்டி வருகிறார். இவர் தாரை, தப்பட்டை இசைக்கும் கலைஞர் . மேலும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் திறந்து விடும் பணி செய்து வருகிறார். இந்நிலையில், மாரியம்மாள் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த சண்முகம், மனைவியையும் கள்ளக் காதலனையும் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரியம்மாளும், ராமமூர்த்தியும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சண்முகம் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் பசுவந்தனை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் மணிமொழி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண் பாலகோபாலன் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு து. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply