65 ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் ரன்வீர்சிங், ஆலியா பட் நடிப்பில் உருவான கல்லிபாய் திரைப்படம் 13 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. 65 ஆவது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும், மூத்த கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜோயா அக்தர் இயக்கிய கல்லிபாய் திரைப்படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்தது. நவீனகால இசையான ஹிப்ஹாப் கலாச்சாரத்தைப் பற்றிய கதையே கல்லிபாய் திரைப்படமாகும்.
மும்பை நகரின் அருகில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதி எனக் கூறப்படும் தாராவியில் குடியிருக்கும் ஒரு தெருப்பாடகன் ஹிப் ஹாப் இசை கலைஞனாக உருவெடுத்துள்ளது பற்றிய உண்மை தன்மை மாறாமலும், உயிரோட்டத்துடன் பதிவு செய்த சோயா அக்தருக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இளைஞனாக வாழ்ந்திருந்த ரன்வீர்சிங்கிற்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.கல்லிபாய் திரைப்படத்தில் நாயகியாக ஆலியா பாட் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச் சென்றார். சிறந்த வசனத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதை கல்லிபாய் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய விஜயிற்கும் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான விருதை கல்லிபாய் படத்திற்காக ரீமாவும், சோயாவும் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
கல்லிபாய் திரைப்படத்தில் நடித்த சித்தார்த் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், அம்ருதா சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றனர். இதுதவிர கல்லிபாய் திரைப்படத்தில் பணியாற்றிய ஜெய் உஷாவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் சூசன்க்கு சிறந்த ப்ரொடக்சன் டிசைனர்க்கான விருதும், ட்வெய்ன் திவாரி ஆகியோருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் கிடைத்தது.
சிறந்த இசை ஆள்வதற்கான ஃபிலிம்ஃபேர் விருதும் கல்லிபாய் திரைப்படத்திற்காக ஜோயா அக்தர் மற்றும் திவாரி இணைந்து பெற்றுக் கொண்டனர். கல்லிபாய் திரைப்படம் தேசிய விருதுக்கு புறக்கணிக்கப்பட்ட தாக பலரும் குற்றம் சாட்டி இருந்த நிலையில் தற்போது பிலிம்பைர் மழையில் கல்லிபாய் திரைப்படக்குழுவினர் நனைந்துள்ளனர்.
சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது கலன் திரைப்படத்திற்காக அரிஜித் சிங்கிற்க்கும், சிறந்த பாடகிக்கான விருது வார் திரைப்படத்தின் பாடலை பாடிய ஷில்பா ராவுக்கும் வழங்கப்பட்டது, இந்த நட்சத்திர விழாவில் மாதுரி தீட்சித், வாணி கபூர், ஊர்வசி, பாடகி உஷா உதூப், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.