இந்திய நடை பந்தய வீராங்கனை பாவனா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பாவனா ராஞ்சியில் நடந்த தேசிய நடை பந்தயத்தில் ஒரு மணிநேரம் 29 மணி நிமிடங்கள் 54 விநாடிகளில் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதைவிட குறைவான நேரத்தில் இலக்கை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.