சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன்கள் வழங்கி உதவ உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார்.கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் தங்களது வங்கி கடந்த 8 காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில் 2019-2020 நிதியாண்டின் காலிறுதியாண்டில் லாபம் ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும்,கடந்த டிசம்பர் மாதத்துடன் மூன்றாவது காலாண்டில் ரூ.6,075 கோடி இழப்பாக இருந்தது.
வாராக்கடன் செலவினமாக ரூ.6664 கோடி இருந்தது. இதற்கு முந்தைய இதே கால அளவை ஒப்பிடுகையில் நஷ்டம் ரூ.346 கோடியாகும்.தற்போது கடந்த 4.5 ஆண்டுகளாக இருந்த நஷ்டம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது குறைவான வட்டி விகிதம் குறைந்தபட்ச முதலீடு கடன் தொகைகளில் கவனம் செலுத்தி வருகிறது.அடுத்து, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,தற்போது ரூ.31 ஆயிரம் கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,இந்தியா முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன. அதில் 250 கிளைகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே செயல்பட உள்ளதாகவும்,இதில் தமிழகத்தில் மட்டும் 100 கிளைகள் உள்ளதாகவும், கோவையில் இதுவரை 1600 கோடி ரூபாய் கடன் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 50 எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், வங்கியிடம் இருந்து அவர்கள் எதிர்பாக்கும் சலுகைகள் குறித்தும் கேட்டுள்ளதாகவும், தொழில்துறையினரின் கருத்துக்களை பரீசிலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.