ராமநாதபுரம் பாம்பனில் குடியுரிமை திருத்த சட்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

ராமேஸ்வரம் தீவு ஐக்கிய ஜமா அத் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாம்பனில் நடந்தது. ராமேஸ்வரம் தீவு ஐக்கிய ஜமாத் தலைவர் ஐ.எச்.பி.ரப்பானி தலைமை வகித்தார். பாம்பன் ஜமாத் தலைவர் என்.அயூப் கான் வரவேற்றார். பாம்பன் ஜூம்மா மஸ்ஜித் முஹமது ரஃபியுதீன் மஸ்லஹி பாஜில் மன்பஈ அறிமுக உரையாற்றினார். மண்டபம் ஒன்றிய ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.எஸ்.லுத்புல்லாஹ் விளக்கவுரை ஆற்றினார்.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, பட்டின்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, இந்திய தேசிய காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் சிறப்புரை பேசினர்.

 

ராமேஸ்வரம் ஜூம்மா மஸ்ஜித் இமாம் அப்துர் ரஹ்மான் மஹ்லரி, தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலர் என்.ஜே.போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, ராமேஸ்வரம் திமுக., நகர் செயலாளர் கே.இ.நாசர்கான், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பாரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்டபம் முகைதீன் ஆண்டவர் பள்ளி ஜமாத் செயலர் நாசர் கான் நன்றி கூறினார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்ட கருப்பு சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்
கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் , ஜார்கண்ட், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக அரசும் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் தடியடியை கண்டன பொதுக்கூட்டம் வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Leave a Reply