சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் விபத்து
சென்னை அண்ணாநகர் மேம்பாலம் அருகே அதிகாலையில் மது போதையில் காரை இயக்கி வந்த நான்கு இளைஞர்கள் சாலையில் நின்றிருந்த மூன்று கார்களை இடித்து சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த வீட்டில் சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தினர்.
பெரும் சத்தத்துடன் நிகழ்ந்த இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வேகமாக வந்த காரில் இருந்தவர்களை பிடித்து பரிசோதித்தனர். அதில் நான்கு இளைஞர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து அங்கு வரைந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நான்கு இளைஞர்களும் அளவுக்கதிகமாக மது போதையில் இருந்ததால் விசாரணையில் அவர்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




