--- --:--:-- --

1 லிட்டர் பாட்டில் குடிநீரின் விலை ரூ.13ஆக குறைப்பு

5

தனியார் நிறுவனங்களின் மூலமாக பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரின் விலையை குறைத்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு லிட்டர் குடிநீர் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதை 13 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கையொப்பம் இட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக கேரள அரசு விரைவில் அரசாணை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் வியாபார ரீதியாக சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியும் என பாட்டில் குடிநீர் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு கூட்டிய கூட்டத்தில் ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் விலையை 12 ரூபாய்க்கு விற்பனை செய்வது என முடிவு செய்யப்பட்டது. எனினும் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக அது அமல்படுத்தப்படவில்லை. கேரள மாநில அரசால் ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon