மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வடமாநில தொழிலாளி
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில கட்டிடத் தொழிலாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தன்டரத்தில் அதில் எக்ஸ்ரவ் எனும் 11 தளம் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பீகாரை சேர்ந்த ராம் சர்மா என்பவர் அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாணவி ஒருவரை கையை பிடித்து புதருக்குள் இழுத்து சென்றதாகவும் அப்போது அவனை தாக்கிவிட்டு மாணவி தப்பி ஓடியதாகவும் இதனைக் கண்டு பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது ராம் ஸர்மா ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் தப்பியோடிய ராம் சர்மாவை கைது செய்ததாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




