--- --:--:-- --

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ! குழந்தையின் கதறல்!

1

சென்னையில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் கிருஷ்ணகிரியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சென்னை கொளத்தூர் கடப்பா சாலையில் வசித்து வரும் முத்து சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

 

அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு கேஸ் வீடு முழுவதும் பரவியுள்ளது. இதை அறியாது சிவசுப்பிரமணியம் லைட் சுவிட்சை ஆன் செய்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பொருட்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஓசூரில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சோமேஸ்வரன் அவரது மனைவி ஷீலா மற்றும் இரண்டு குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon