--- --:--:-- --

நீட் தேர்வு முறைகேடு – 10 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு

1

நீட் தேர்வு முறைகேட்டில் ஆள் மாறாட்டத்திற்கு உதவிய 10 மாணவர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

அதை தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள் 8 மாணவர்கள் என மொத்தம் பத்து பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

இவர்கள் குறித்த விவரம் தெரிந்தவர்கள் சிபிசிஐடிக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon