கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.இந்த பகுதியில் வசித்து வரும் கிராமப்பகுதி மக்களால் சக்தி வாய்ந்த அம்மனாக போற்றப்படும் இந்த கோவிலின் புனரமைப்பு திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவுற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது. மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்கி, இரண்டாம் காலமும், மாலை மூன்றாம் காலமும் யாகபூஜைகள் நடைபெற்றது.பின்னர், யாகசாலை பூஜைகளும், கடம்புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.விழாவையொட்டி பிரசித்தி பெற்ற கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கூட்டத்தில் குண்டம் திருவிழா,மற்றும் திருக்கல்யாண உற்சவம்,சக்ராபுரம் பள்ளையம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோவில் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.