“போயி வேற வேலை இருந்தா பாருங்கடா…” விஜய் சேதுபதி காட்டம்!
தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டரில் காட்டமாக பதிலளித்துள்ளார்.
விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், சினிமா துறையினரை கிறிஸ்துவ மதத்தின் பக்கம் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” எனக் குறிப்பிட்டு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




