கடலூரில் குடும்பப் பிரச்சினை காரணமாக திருமணமான பெண் மற்றும் அவரது தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடலூர் கண்ணார பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாவாடை சாமி, சுமதி தம்பதியின் மகள் சங்கீதாவிற்கும் புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ராஜேஷும், சங்கீதாவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்தினர் சங்கீதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு ராஜேஷ் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் சங்கீதா தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்தினர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பாவாடை சாமியும் அவரது மகள் சங்கீதாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.