பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய போலி செய்தியாளர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவன் வெள்ளியங்கிரி. செய்தியாளர் என்று கூறிக்கொண்டு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய ஊழியரான பூங்கொடியிடம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

 

அவர் அளித்த புகாரின் பேரில் வெள்ளியங்கிரி போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியபோது சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை குளிக்கும் போது மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்து அந்த பெண்ணை பகிரங்கமாக மிரட்டுவதும், அதற்கு இளம்பெண் தற்கொலை செய்வதாக கதறுவதுமான ஆடியோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய போலி செய்தியாளர் கைது

அந்த ஆடியோவில் தற்கொலை செய்து கொள்வதை பற்றி கவலை இல்லை என்றும் ஏற்கனவே ஒரு பெண் இதுபோல் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெள்ளியங்கிரி பதிலளிக்கும் பதிவுகளும் அவனது செல்போனில் கிடைத்துள்ளன.

 

இதனையடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர், செயலர், பார் உரிமையாளர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்கும் ஆடியோகளையும் அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


Leave a Reply