--- --:--:-- --

6 நாட்களாக மாணவியை அடைத்து வைத்து பொறியியல் இளைஞர் பாலியல் வன்கொடுமை!

7

கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை 6 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அரசுப்பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் விநாயகர் தெருவை சேர்ந்த முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் நட்பாக பழகி உள்ளார்.

 

அதனை பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் தொடர்ந்து 6 நாட்களாக மாணவியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கல்லூரி மாணவரின் வீட்டில் இருந்த மாணவியை மீட்டனர்.

 

தனது பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon