டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி அமோகம்..!! ஆட்சியை தக்க வைக்கிறார் கெஜ்ரிவால்!!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வது உறுதி என்றே தெரிகிறது.
70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், கடும் போட்டியை தராமல் ஒப்புக்கு நின்றதாகவே தெரிந்தது.
கடந்த 8-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மெய்யாகும் வனகயில் ஆம் ஆத்மி அமோகமாக பெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
“முன்னணி நிலவரம் :
மொத்த இடங்கள் : 70
ஆம் ஆத்மி ஆட்சி : 53
பா.ஜ.க. : 16
காங்கிரஸ் : 01”
மூன்றில் 2 பங்குக்கும் மேலான இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிப்பதால், அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் அரியணையை தக்க வைப்பது உறுதியாகியுள்ளது. இப்போதே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




