அமெரிக்க ராணுவத்திற்கு ஜெடி எனப்படும் ஜாயிண்ட் என்டர்பிரைசஸ் தெஃபென்ஸ் இன்ஸ்டிரக்ஷன்ஸ் கிலௌட்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் தங்களை புறக்கணித்துவிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதில் டிரம்ப் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம் அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சரையும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது.
10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட்க்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்த முடிவு செய்யப்படும் நேரத்தில் அமேசானை ஒழித்து கட்டுமாறு உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்து உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நடுவன் அரசின் கொள்முதல் நடைமுறைகளின் அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்து நாம் தனிப்பட்ட ஆதாயங்களை தொடர்ந்து தேடுவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.