பரோட்டாவிலிருந்து மாறி பஜ்ஜி சுட்ட சூரி!

நடிகர் சூரி படப்பிடிப்பு தளத்தில் பஜ்ஜி தயாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நகைச்சுவை நடிகர் சூரியும் இதில் நடித்து வருகிறார்.

 

இந்தநிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச்சுட பஜ்ஜி தயார் செய்தாராம். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.


Leave a Reply