வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி! மாஸ் காட்டிய விஜய்!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

 

வருமான வரி துறையினரால் நடிகர் விஜய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி பாஜகவினர் என்எல்சி சுரங்க நுழைவு வாயிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

இரண்டு நாட்களாக தடியடி நடத்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் நெய்வேலி சுரங்கம் முன்பு குவிந்தனர். இதனைக்கண்ட நடிகர் விஜய் வேன் மீது ஏறி நின்றவாறு ரசிகர்களை நோக்கி கையசைத்தார். தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

 

நெய்வேலி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கிய மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது.


Leave a Reply