--- --:--:-- --

நாங்க.. மானம், ரோஷம், வெட்கம் பாக்க மாட்டோம்..! அத வெளிக்காட்டாம சிரிச்சு நடிப்போம்..! உண்மையை பேசிய நம்ம அமைச்சர்!!

IMG_20200209_204555

நாங்க ஓட்டு கேட்டுப் போகும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குல பூட்டி வைச்சிட்டு, சிரிச்சுட்டே சமாளிச்சுப்போம் என தனது சொந்த அனுபவங்களை நம்ம அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளது அடடா என்று மெச்ச வைத்துள்ளது.

 

யார் அந்த அமைச்சர் என்கிறீர்களா? அம்மா இருந்த காலத்துல அம்மா நடமாடும் இடம் கோவில். செருப்பு போட்டு நடக்க மாட்டேன் என வெறுங்காலுடன் நீண்ட தாடி, மீசையுடன் வலம் வந்து, கடைசியில் குட்டுப் பட்டவர்தான்.

 

என்ன மதுரையைச் சுத்தியுள்ள நாலைஞ்சு அமைச்சர்கள்ல ஒருத்தர் என இப்பவே யூகிச்சிருப்பீர்கள் தானே? அப்படியே தான். அந்த அமைச்சர் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்பம் என ஏகப்பட்ட துறைகளை வைத்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் தான்.

 

தமிழக அமைச்கர்களில் காரியம் சாதிக்க என்ன வேஷமானாலும் போடுவதில் கில்லாடி என பெயர் பெற்றவர் தான் ஆர்.பி. உதயகுமார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.சை கிளீன் போல்டு செய்ய, சசிகலா முதல்வராக வேண்டும் என இவர் கொடுத்த வாய்ஸ் தான் காரணம்.

 

முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக இருந்த உதயகுமார், இப்போது ஓபிஎஸ்சின் அதிதீவிர விசுவாசியாக மாறி விட்டார். அது மட்டுமின்றி சசிகலா தரப்பால் அதிமுகவில் என்ட்ரியாகி அமைச்சராகவும் உயர்ந்த இவர், சில நாட்களுக்கு முன் நான் சசிகலா ஆதரவாளர் இல்லை என பகிரங்கமாகவே அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.

 

இந்நிலையில் தான், தனது திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் டோல்கேட்டில் அடிக்கடி நடைபெறும் மோதல் சம்பவங்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக, அந்த டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தினார்.

 

இந்த கப்பலூர் டோல்கேட்டில் சமீப காலமாக ஊழியர்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல், அடிதடி என்பது வாடிக்கையாகி விட்டது.

இந்த டோல்கேட்டில் நடந்த ஒரு மோதலின் போது துப்பாக்கி சூடு கூட நடந்தது. இதனால் இந்த டோல்கேட் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்க அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இந்த முகாமில் பங்கேற்று பேசினார்.

 

அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார், எனது தொகுதியில் உள்ள டோல்கேட்டில் ஏற்படும் பிரச்னையால் எனக்கு வாக்குகள் பாதிக்கும் நிலை உள்ளது. இங்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என்று கூட சிலர் கொளுத்திப் போடுகின்றனர்.

 

எனவே வாகன ஓட்டிகளை சகோதரர்களாக நினைத்து மென்மையாக நடந்து கொண்டால் பிரச்னை வராது என்று அட்வைஸ் கூறிய அமைச்சர் தனது சொந்த அனுபவங்களை எடுத்து விட்டார்.

 

நாங்க ஓட்டுக் கேட்டு போடும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குள் அடக்கி கொள்வோம். அதனை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டே ஓட்டுக் கேட்போம். அதுபோல நீங்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

 

அப்பதான் பிரச்னை வராது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூற, கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும், தன்னைப்போலவே எல்லாரையும் ரோசம், மானம், வெட்கம் பாக்காதீர்கள் என்கிறாரே? என விக்கித்துப் போயினர். காரியம் ஆகணும்னா ரோசம், மானம் பாக்கக் கூடாது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளது இப்போது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon