--- --:--:-- --

திருப்பூரில் கல்விக் கடனுக்கு அதிக வட்டி! இளம்பெண் கலெக்டரிடம் மனு!!

8bc94bb3-aac2-4187-9a91-a746f4c19092

திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பிரபா(22) இவர் 2013ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1155 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக வங்கியில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் விண்ணப்பித்து இரண்டாண்டுகள் கடந்த நிலையிலும் கல்வி கடன் கிடைக்காத நிலையில் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி படித்துள்ளார்.

 

இரண்டு ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பின் மூன்றாம் ஆண்டு மத்தியில் திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை கல்விக் கடனாக வழங்கியுள்ளது. இந்நிலையில் கல்வி கடன் பெற்றது முதல் மாதந்தோறும் அதற்கான வட்டியை செலுத்தி வந்துள்ளார்.

 

2017 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்பு ஓர் ஆண்டு வேலை கிடைக்காமல் வீட்டிலிருந்த பிரபா, தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது உடனடியாக கல்விக்கடனுக்கு வட்டியுடன் சேர்ந்து 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை உடனடியாக கட்ட வேண்டும் என வங்கி வற்புருத்தி வருவதாகவும், தற்போது உள்ள சூழ்நிலையில் தன்னால் பணத்தை உடனடியாக கட்ட இயலாத நிலையில், வங்கி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மேலும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.

 

இதனால் முழுத்திறனோடு பணிபுரிய முடியாமல் இருந்து வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபா கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon