விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது
விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு ரூபாய் நோட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய வண்ணங்களில் புழக்கத்தில் விடப்பட இருக்கிறது.
புதிய ஒரு ரூபாய் நோட்டு 9.7 சென்டிமீட்டர் நீளம், 6.3 சென்டிமீட்டர் அகலம், 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடை கொண்டதாக இருக்கும். விவசாயத்தை சித்தரிக்கும் வகையில் தானியங்கி வடிவமைப்பு, அதனை சுற்றி சாகர் சாம்ராஜ் எண்ணெய் ஆய்வு தளம் மற்றும் 15 இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும்.
ஒரு ரூபாய் நோட்டில் ஒட்டுமொத்த நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறத்துடன் மற்ற வண்ணங்களும் இணைந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




