திருப்பூர், ஏ.கே.ஆர் அகடெமி பள்ளிகளின் மழலையர் விளையாட்டு விழா

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி மற்றும் பி.என்.ரோடு, சூர்யா பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகடெமி பள்ளிகளின் மழலையர் விளையாட்டு விழா அணைப்புதூர் ஏ.கே.ஆர் அகடெமி பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவானது 2 பள்ளிகளிலும் படிக்கும் பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி ஆகிய வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடந்தது.

 

மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்து சேகரித்தல், தொடர் ஓட்டம், பந்து எறிதல், பந்தை ஊ தி தள்ளுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். கிளைப்பள்ளி முதல்வர் கலைமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலந்துகொண்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து எல்.கே.ஜி மாணவர்கள் தலைவர்கள் வேடமணிந்து நடனமாடியும், யு .கே.ஜி மாணவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில நடனங்களையும் ஆடி அசத்தினர். தொடர்ந்து உடற்கூறு பயிற்சிகள் நடந்தது. முடிவில் பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் செய்து இருந்தார்.


Leave a Reply