--- --:--:-- --

ஏ.வி.பி.பள்ளியில் கிரிசாலிஸ் நிகழ்ச்சி

18

திருப்பூர், திருமுருகன் பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாளையத்தில் உள்ள ஏ.வி.பி. நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிரிசாலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றொரு பிரிவாகவும் பங்கு பெற்றனர்.

 

நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவ-மாணவியருக்கும் ஒரு கணினி வழங்கப்பட்டு அதில் அவர்கள் அவர்களுக்கு கொடுத்த தலைப்பில் அறிக்கையை தயார் செய்து விளக்கம் அளித்தனர். அவர்கள் பயன்படுத்திய செயலி, கருவிகளை பற்றி விவரித்து அதை எப்படி தயார் செய்தனர் என்பதை தெளிவாக எடுத்து கூறினர்.

 

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியா ராஜன், ஒருங்கிணைப்பாளர் வனிதா மணி உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக பார்வையிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon