சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பச்சிலாபுறம் பகுதியில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆவடியை சேர்ந்த குமார் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்தியதில் இறந்தவன் கன்னிகா புரத்தை சேர்ந்த சதீஷ் என்பதும், அவனுக்கு கஞ்சா பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் கஞ்சா போதையில் தனது வளர்ப்புத் தாயான அஞ்சலி என்பவரிடம் அவன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து சதீஷ் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அஞ்சலி உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்களை சிறையில் அடைத்தனர்.