டெல்லியில் பெண் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ரோகினி காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளரான பிரீத்தி நேற்று இரவு பணி முடிந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை இன்னொரு உதவி ஆய்வாளரான தீபான்ஸ் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் கர்ணால் அருகே காரில் தீபான்ஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய டெல்லி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!